இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை அடுத்து மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் இத்தனை லட்சம் வசூலா!

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை அடுத்து மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் இத்தனை லட்சம் வசூலா!


India chinna meet

இந்திய மற்றும் சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பானது கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதனால் சென்னை நகரமே விழா கோலம் போல காட்சி அளித்தது. மேலும் கடற்கரை சாலைகள் மிகவும் தூய்மையாகவும், அமைதியாகவும் காணப்பட்டது.

அந்த இரு தினத்தில் இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து நாட்டின் வளர்ச்சி குறித்த திட்டங்களை பேசியுள்ளனர். அவர்கள் சென்ற அடுத்த நாள் முதல் மாமல்லபுரத்தில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகியுள்ளது.

Mamailapuram

ஆனால் மாமல்லபுரத்தில் போதுவாக விடுமுறை மற்றும் விழா நாட்களில் மட்டும் தான் அதிக கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு இப்படி ஒரு மக்கள் கூட்டத்தால் மாமல்லபுரம் களைகட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ₹40 ஆகவும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ₹600 ஆகவும் தொல்லியல் துறை வசூல் செய்துள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ₹7 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.