இரண்டு மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு... பதற்றமான பெற்றோர்...!!

இரண்டு மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு... பதற்றமான பெற்றோர்...!!


In Uttar Pradesh, a monkey threw a two-month-old baby from the floor while he was sleeping in a crib.

உத்தர பிரதேசத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு, மாடியில் இருந்து வீசியது. 

விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை இவரது இரண்டு மாத குழந்தை கடந்த தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த குரங்குகள் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கி கொண்டு ஓடியது. குழந்தையை தூக்கிச் சென்றதில் குழந்தை வலியில் அழுதுள்ளது. 

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் குரங்கு கூரையின் மேல் பகுதிக்கு சென்று விட்டது. குழந்தையை குரங்கிடம் இருந்து பாதுகாக்க குரங்கை பயமுறுத்தியுள்ளனர். இருந்து குழந்தையை வாங்க பல முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், கூரை மேல் சென்ற குரங்கு குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது. 

கீழே விழுந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை திந்த்வாரி பகுதியில் இருக்கும் குடும்ப நல மையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோல, குரங்குகள் கூட்டமாக மக்களை தாக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன. வன துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.