65 வயதுடைய மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை; சிகரெட் கொடுக்க மறுத்ததால் அதிர்ச்சி செயல்.!



in Bihar Lakhisarai 65 Year Old Lady Gang Raped 

 

பீகார் மாநிலத்தில் உள்ள லக்கிசாராய் மாவட்டம், சூர்யகரகா காவல் எல்லைக்குப்பட்ட பகுதியில் வசித்து வரும் 65 வயதுடைய மூதாட்டி, அங்குள்ள பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். 

இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் 4 இளைஞர்கள் குழுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது, சிகிரெட் கொடுப்பது தொடர்பாக தகராறு உண்டாகியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 15 வயது சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற குரங்குகள்; பதறவைக்கும் சம்பவம்.!

Bihar

கூட்டுப்பாலியல் பலாத்காரம்

இதனிடையே, சம்பவத்தன்று இரவு நேரத்தில் மூதாட்டி வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தபோது, அவரை 4 பேர் இளைஞர்கள் கும்பல் வயல் வெளிக்கு தூக்கிச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 2 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாட்டு; 3 சிறார்கள் இரயிலில் அடிபட்டு பலி.!