15 வயது சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற குரங்குகள்; பதறவைக்கும் சம்பவம்.!



  in Bihar Siwan a Girl Killed by Monkey 

வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிறுமியை 15 வயது சிறுமி குரங்குகளால் கீழே தள்ளப்பட்டதில் உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தில் உள்ள ஷிவான் மாவட்டம், பக்வான்பூர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரின் மகள் பிரிய குமார் (வயது 15). சிறுமி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதனிடையே, சிறுமி இன்று காலை நேரத்தில் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று வெயில் காய்ந்துகொண்டு இருந்ததாக தெரியவருகிறது.

இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் இரயிலில் பயங்கரம்.. பயணி சுட்டுக்கொலை..!

மாடியில் இருந்து தவறி விழுந்தார்

அப்போது, திடீரென மூர்க்கத்தனமாக வந்த குரங்குகள் கூட்டம், சிறுமியிடம் சண்டையிட்டு இருக்கிறது. மேலும், ஒருகட்டத்தில் கூட்டமாக சேர்ந்து அவைகள் தாக்கவே, சிறுமி மாடியின் ஓரத்திற்கு சென்று இருக்கிறார். 

death

இதில் சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குரங்குகளின் அட்டகாசத்தை வனத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!