ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
எக்ஸ்பிரஸ் இரயிலில் பயங்கரம்.. பயணி சுட்டுக்கொலை..!

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஹவுரா நகரில் இருந்து, கயா நோக்கி அதிவிரைவு இரயில் ஒன்று நேற்று மாலை சென்றுகொண்டு இருந்தது. இரயில் பீகார் மாநிலத்தில் உள்ள லகிஷராய் மாவட்டத்தின், கியுள் இரயில் நிலையத்தை நோக்கி பயணித்தது.
அச்சமயம், இரயிலில் பயணித்த மர்ம நபர்கள், திடீரென எழுந்து பயணியை துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த ஒரு பயணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின் அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி, ஓடும் இரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது.
இதையும் படிங்க: "ஆண்ட்டி ப்ளீஸ் வேண்டாம்" பதறிய சிறுவன்.. பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது பெண்.!
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் குறித்து இரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயணி தர்மேந்திரா குமார் (வயது 49) என்பது தெரியவந்தது. இவர் லாகிசாராய் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
தர்மேந்திரா குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் கைப்பையில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், சொத்து தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? தனிப்பட்ட விரோதமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் சோகம்; கர்ப்பிணி பெண் பலி.!