"ஆண்ட்டி ப்ளீஸ் வேண்டாம்" பதறிய சிறுவன்.. பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது பெண்.!



west bengal 28 years women sexually abused boy

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி 

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்படும் அவலமே பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், தற்போது ஆண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் போங்கான் பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் போனில் வீடியோ

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா பிஸ்வாஸ் (28 வயது) என்ற பெண் தன்னுடைய உறவுக்கார சிறுவன் ஒருவனை பலவந்தமாக மிரட்டி பாலியல் ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார். அதை அவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

இதையும் படிங்க: காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் சோகம்; கர்ப்பிணி பெண் பலி.!

west bengal

தாயிடம் கதறல்

அதன் பின் அந்த சிறுவனை அடிக்கடி அழைத்து வீடியோவை மற்றவர்களிடம் அனுப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தொல்லைகள் தாங்க முடியாத சிறுவன் தன் தாயிடம் சென்று தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறி கதறி அழுதுள்ளார்.

போக்ஸோவில் பெண் கைது

தன் மகனின் இந்த நிலையை கேட்டு பதறிப்போன தாய் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீபிகாவை தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாபில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்.. லாரி ஓட்டுநர், கிளீனர் உடல் கருகி மரணம்..!