பஞ்சாபில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்.. லாரி ஓட்டுநர், கிளீனர் உடல் கருகி மரணம்..!



in Punjab Tamilnadu Registration Truck Fire Accident Driver Cleaner Dies 

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரனடா பகுதியில், லாரி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி, திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு & மீட்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தமிழர்கள் இறந்தது உறுதி

லாரியை சோதித்தபோது, அதற்குள் இருவரின் உடல்கள் இருந்தது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட லாரி என்ற முறையில், ஆவணங்களை சோதித்தபோது இரண்டு தமிழர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. துணிக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை.!

punjab

இருவரும் பலி

பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர், டிரைவர் மற்றும் கிளீனர் வனத்திற்குள் உறங்கியபோது சோகம் நடந்தது தெரியவந்தது. வாகனத்தில் கொசுவர்த்தி ஏற்றி வைத்து உறங்கியபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அடையாளம் சேகரிக்கப்படுகிறது

உயிரிழந்த 2 தமிழர்களின் அடையாளம் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்; வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை.!