3 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை.. வீட்டிற்குள் கதறல் சத்தம்.. பதறி வந்த மக்கள்.. தமிழகத்தில் பயங்கரம்..!
கோயம்புத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுனர் ஒருவர் ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், நாகம நாயக்கன் பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த் (வயது 52). இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவினர் அன்பு எஸ்தர் என்ற 37 வயது நபருடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். எஸ்தரின் கணவர் துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
கள்ளக்காதல்:
இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அன்பு எஸ்தர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த திலீபன் என்ற 38 வயது நபரின் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திலீபனின் மனைவி மற்றும் குழந்தைகள் திருப்பத்தூரில் வசித்து வரும் நிலையில், ஹோட்டல் உரிமையாளர் திலீபனுக்கும், அன்பு எஸ்தருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக பிரேம் சந்தேகித்துள்ளார். இதனால் இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிய நிலையில், இதனை ஏற்க மறுத்து எஸ்தர் மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
ஹோட்டல் ஓனருடன் தொடர்பு?
கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஆனந்த் திடீரென ஹோட்டலுக்கு சென்ற நிலையில் அங்கு அன்பு எஸ்தர் மற்றும் திலீபன் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்ததை நேரில் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கத்தியை எடுத்து எஸ்தரின் கழுத்தில் குத்தியதில் தடுக்க முயன்ற திலீபனுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ஆனந்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

4 வது திருமணத்திற்கு பிளான்:
இதனிடையே தனக்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடந்து முதல் மனைவி இறந்து விட்டதாகவும், இரண்டாவது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதாகவும், மூன்றாவது மனைவி வேறொருவருடன் சென்ற நிலையில், நான்காவதாக எஸ்தரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தபோது ஹோட்டல் உரிமையாளர் அதற்கு இடையூறாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த நபர் எஸ்தரை கொலை செய்ய முயற்சித்தாக கூறிய நிலையில், இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்து கொலை:
கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தவர் உள்ளூரில் விசாரித்த போது அன்பு எஸ்தர் மற்றும் திலீபன் ஒன்றாக ஊர் சுற்றுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தனக்கு கிடைக்காத பெண்மணி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைத்தவர் நேற்று அதிகாலை 05:30 மணி அளவில் அவரது வீட்டிற்கு கத்தியோடு சென்று இருக்கிறார். அங்கு திலீபனை சரமாரியாக குத்திய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதனை தடுக்க முயன்ற அன்பு எஸ்தரும் காயம் அடைந்து இருக்கிறார்.
வீட்டில் தீ வைத்து தற்கொலை முயற்சி:
பின் வீட்டுக்குள் சென்றவர் சமையல் எரிவாயுவை திறந்து விட்டு நெருப்பு வைத்துள்ளார். அதனால் தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில், எஸ்தர் வேறொரு அறைக்கு தப்பி சென்றுள்ளார். பிரேம் ஆனந்த் மீது தீப்பற்றி எரிந்து ஜன்னல்கள் வெடித்து சிதறியுள்ளன. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்ற போதும் பலனில்லை. பின் அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு வந்து விசாரித்த நிலையில் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.