ஜன்னல் வழியே பெண் குளிப்பதை படம் பிடித்த ஐஐடி மாணவர் கைது!

ஜன்னல் வழியே பெண் குளிப்பதை படம் பிடித்த ஐஐடி மாணவர் கைது!


IIT student caught on capturing girl bathing

மும்பை தானே பகுதியை சேர்ந்த அவினாஷ் குமார் யாதவ்(35), என்பவர் மும்பை ஐஐடியில் மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 

சம்பவதன்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் குளியல் அறையில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ஜன்னல் வழியே ஒரு மொபைல் போன் தான் குளிப்பதை படம் பிடித்து கொண்டிருப்பதாக உணர்ந்தார். 

இதனைத் தொடர்ந்து அந்த பெண் அலறவே அவரது கணவர் வெளியில் ஓடி வந்து பார்த்தார். சத்தத்தை கேட்டதும் படம்பிடித்து கொண்டிருந்த அவினாஷ் அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளார். அவரை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மடக்கிப் பிடித்தார். 

பின்னர் அவினாஷின் மொபைல் போனை சோதனை செய்த போது அந்த குடியிருப்பில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. உடனே அவினாஷை போலிசில் ஒப்படைத்தனர். போலிசார் அவர் மீது 354 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு நபருக்கு தெரியாமல் அவரது அந்தரங்க விசயங்களை படம் பிடிப்பது இந்திய சட்டம் பிரிவு 354ன் படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.