தயிரால் வீட்டை விட்டு ஓடிய மனைவி! அதிரவைக்கும் காரணம்...இப்படி ஒரு சம்பவமா..?



hyderabad-wife-missing-curd-dispute

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடும்ப தகராறை தொடர்ந்து இளம்பெண் மாயமான சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. குக்கட்பள்ளி பகுதியில் வசிக்கும் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த நிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் எடை விவகாரம் மோதலுக்கு காரணம்

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்குள், மனைவி மிகவும் ஒல்லியாக இருப்பது குறித்து கணவர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், உடல் எடை அதிகரிக்க வேண்டுமென அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் பார்த்த தகவலின் அடிப்படையில், தினமும் தயிர் சாப்பிட்டால் எடை கூடும் என நம்பிய அவர், மனைவியையும் அதற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

தயிர் சாப்பிட மறுத்ததால் வாக்குவாதம்

ஆனால், அந்தப் பெண்ணுக்கு பால் மற்றும் தயிர் போன்ற உணவுகள் பிடிக்காததால், இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தயிர் சாப்பிட வேண்டும் என்ற கணவரின் வற்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்ததாகவும், இதனால் குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மருமகளின் தலையை துண்டித்த மாமியார்.... தலை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்கள் வேறு இடத்திலும்...! கொடூர கொலையின் பரபரப்பு வாக்குமூலம்!

மனைவி திடீர் மாயம்... போலீசார் தேடுதல்

இந்நிலையில், கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி மனைவி மாயம் ஆனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “தயிர் சாப்பிடச் சொன்னதற்காகவே கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: வறுமையால் பிரிந்த காதல் தம்பதிகள்! கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்! பரபரப்பு சம்பவம் !!!