சொகுசு காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: எம்.எல்.ஏ-வின் மகன் கைது; அதிரும் அரசியல் வட்டாரம்..!

சொகுசு காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: எம்.எல்.ஏ-வின் மகன் கைது; அதிரும் அரசியல் வட்டாரம்..!


hyderabad gang rape issue mla son was arrested

சொகுசு காரில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ-வின் மகன் உட்பட 6 கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பிரபல  பஃப்  ஒன்றில் கடந்த 28 ஆம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 வயது சிறுமி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது னாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பஃப்பில் நடந்த இகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த அந்த சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி சிவப்பு நிற 'பென்ஸ்' காரில் சிறுவர்கள் உள்பட 6 பேர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த சிறுமியை பஞ்சாரா கில்ஸ் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த 6 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சம்பத்தப்பட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதற்கிடயில் நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 6 வதாக கைது செய்யப்பட்டுள்ளவர் அனைத்து இந்திய மஜ்லிக் இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-வின் மகன் என்று தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் மகன் மைனர் என்பது தெரியவந்துள்ளது.