இந்தியா

பற்றி எறிந்த பைக்! அதிவேகத்தில் மோதிய கார்! பார்ப்போரை பதறவைக்கும் CCTV காட்சிகள்.

Summary:

ஹைதராபாத்தில் கார் ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஹைதராபாத்தில் கார் ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத் புவனகிரி தேசிய நெடுஞ்சாலையில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக போடப்பட்டிருந்த சிக்னலில் வானங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்த. அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் இருந்த தடுப்பதில் மோதி அங்கிருந்த வாகனங்களில் வரிசையாக மோதியது.

கார் மோதிய இந்த விபத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்று தீ பிடித்து எரிந்தது. மேலும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்தநிலையில் வவிபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த ஓட்டுநர் நாகராஜ் என்பவர் உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.


Advertisement