ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியை வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியை வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!


Husband forced to take a nude bath

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக அருவியில் பொதுமக்கள் மத்தியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வலியுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்கவேண்டும் என்று மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். இதனைக்கேட்டு கணவர் மற்றும் மாமியார் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி  அருவியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வலியுறுத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர், மாமியார் மற்றும்   மந்திரவாதி உட்பட நான்கு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.