புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசையாக முத்தம் கொடுக்கவந்த மனைவி! கடைசி நொடியில் காத்திருந்த பேரதிர்ச்சி!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தஸ்லீமா என்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு அன்சாரி எனப்வரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அன்சாரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மனைவி இருப்பது தஸ்லீமாவுக்கு பின்னர்தான் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்து வெகு நாட்கள் ஆகியும் அன்சாரி எந்த வேலைக்கும் செல்லாமல் தனது இரண்டாவது மனைவி தஸ்லிமா வீட்டிலையே இருந்துவந்துள்ளார். இதனால் தஷலீமாவிற்கும், அன்சாரிக்கும் இடையே பலமுறை சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் தனக்கு முத்தம் தருமாறு அன்சாரி தஷலீமாவிடம் கேட்டுள்ளார். கணவருக்கு முத்தம் கொடுக்க ஆசையாக வந்த தஸ்லிமாவின் நாக்கை கடித்து பின்னர் கத்தியை வைத்து நாக்கை வெட்டி எடுத்துள்ளார் அன்சாரி. வலியால் அலறியபடி காவல் நிலையம் சென்ற தஸ்லிமா நடந்ததுபற்றி புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் தஸ்லிமாவை மருத்துவமனையில் அனுமதித்து வெட்டப்பட்டு நாக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார் அன்சாரியை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.