இந்தியா

திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் அழகான மனைவியை அடித்து விரட்டிய கணவன்! என்ன காரணம் தெரியுமா?

Summary:

Husband beat wife for love issue

திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் காதல் மனைவியை கணவன் பெல்ட்டால் அடித்து, நைட்டியுடன் விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் என்பவரும், சவுமியா என்ற கல்லூரி பேராசிரியையும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு சவுமியா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சவுமியா வீட்டில் இருந்து கிளம்பி சார்லஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சார்லஸின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் தனது காதல் மணைவியின் இளம் வயது சம்பவங்கள் குறித்து சார்லஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தனது கணவர் எதுவும் தப்பாக நினைத்துக்கொள்ளமாட்டார் என்று எண்ணிய சவுமியா தனது சிறுவயது காதல் குறித்து கணவனிடம் கூறியுள்ளார்.

தனது மனைவி வேறொரு நபரை காதலித்திருப்பதை அறிந்த சார்லஸ் தனது மனைவியை பெல்டால் அடித்து விரட்டியதோடு, திருமணத்திற்கு செலவு செய்த ரூபாய் 2 லட்சத்தை வாங்கி வருமாறும் கூறியுள்ளார். இதனால் அழுதபடியே வீட்டிலிருந்து வெளியேறிய சவுமியா இதுகுறித்து பெற்றோரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

மகளை திரும்பவும் வீட்டிற்கே பெற்றோர் வர சொல்ல, பின்னர் இதுகுறித்து சவுமியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement