இந்தியா

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த மனைவி - வெளிநாட்டு நபரால் வந்த விபரீதம்!

Summary:

husband and wife problem,wife got illegal relation

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ் - சீதாராணி தம்பதியினர்.இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு வீட்டில் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சீதாராணி.

இந்நிலையில் சீதாராணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநரான ஹமீது மீது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் பல முறை சீதாராணியை எச்சரித்துள்ளார். ஆனால் மனைவி அதை கண்டுகொள்ளாததால் முறையாக அவரை விவாகரத்து செய்துள்ளார் சுரேஷ்.

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநரான ஹமீது வேலைக்காக இரண்டு வருடம் வெளிநாடு சென்றுள்ளார்.2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து விட்டு ஊர் திரும்பிய  ஹமீது சீதாராணியை பார்க்க சென்றுள்ளார்.ஆனால் அவர் ஹமீத்தை கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஹமீது கடந்த வெள்ளிக்கிழமை மாலை சீதாராணியின் வீட்டிற்கு சென்று அவரை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார்.அதற்கு அவர் மறுக்கவே சீதாராணியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தானும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement