இந்தியா

5 வருடங்களில் ஐந்து குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை! இதற்காகவா.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்கள்!

Summary:

http://www.puthiyathalaimurai.com/newsview/74656/HARYANA-MAN-ARRESTED-FOR-KILLING-HIS-FIVE-CHILDREN

ஹரியானா ஜிந்த் மாவட்டம் சபிதான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜும்மா. கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவரது மனைவி தற்போது மீண்டும் மனைவி 6வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் ஜும்மா சமீபத்தில் தனது 11 மற்றும் 7வயது மகள்கள் இருவரையும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசார் ஜும்மாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இந்நிலையில்மகள்கள் இறந்த அதிர்ச்சியில் அவர் குழப்பமாக இருக்கலாம் என்று எண்ணி போலீசார் அவரை விடுவித்துள்ளனர்.

 ஆனால் அதனைத் தொடர்ந்து கிராம பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொண்டபோது, ஜும்மா தமது குழந்தைகளை தான்தான் அளவுக்கு அதிகமாக போதை மருந்து கொடுத்து கால்வாயில் வீசியதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது இருமகன்கள் மற்றும் மகளை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

முதலில் வறுமையின் காரணமாகவே இவ்வாறு செய்ததாக கூறிய அவர் தொடர் விசாரணையில் மந்திரவாதி ஒருவர் கூறியதன் பேரில் தான் இந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.பின்னர் இதுகுறித்து  போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் போலீசார்கள் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement