இருந்தாலும் இவ்வளவு அசால்ட்டாக இருக்கக் கூடாது..22 கிலோ கேன்சர் கட்டியை தொப்பை என நினைத்து அசால்டாக இருந்த பெண்மணி..!

இருந்தாலும் இவ்வளவு அசால்ட்டாக இருக்கக் கூடாது..22 கிலோ கேன்சர் கட்டியை தொப்பை என நினைத்து அசால்டாக இருந்த பெண்மணி..!



however-one-should-not-be-so-assaulted-the-woman-who-wa

டெல்லியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்துள்ளார். ஆனால் அவ்வாறு இருந்தும் கூட அவரது வயிறு மட்டும் பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளது. இதனால் தனது டயட் முறையில் ஏதேனும் தவறு நடந்து தொப்பை பெரிதாகுதோ என்று நினைத்த அந்தப் பெண் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்டு வந்துள்ளார்.

இருப்பினும் அவரது வயிரானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் வயிறு வலி தாங்க முடியாமல் துடித்த அந்த பெண் டெல்லியில் உள்ள தரம்ஷீலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அங்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவரது கர்ப்பப்பையில் கேன்சர் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

delhi

இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவதற்காக ஏற்பாடுகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதற்காக 4 அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் குழுவானது மூன்று மணி நேர தீவிர அறுவை சிகிச்சைமூலம் அப்பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 22 கிலோ கட்டியை முழுவதுமாக அகற்றினர். மேலும் கட்டி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.