பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ரூ.10 லட்சம் வரை வரி செலுத்தாமல் தப்பிக்க முடியும்! எப்படி தெரியுமா?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பினை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
இதனால் உங்களது ஆண்டு வருமாணம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த 5 லட்சத்தையும் தாண்டி மேலும் ரூ.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறுவத்றகான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதன் மூலம் ரூ.10 லட்சம் வரை உங்களால் வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
இது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்.
அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சமும் உங்கள் மொத்த வருமானம் கிடையாது. அரசின் மற்ற வரிச்சலுகை பிரிவுகளான 80C முதல் 80U வரையில் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி காழிக்கப்பட்ட பின்பு மீதமுள்ள தொகை ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் மட்டுமே நீங்கள் வரி செலுத்தும் நிலை உருவாகும்.
ஒருவேளை உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருப்பின் முதல் 5 லட்சத்தில் ரூ.1.5 லட்சம் பி.எப், இன்சூரன்ஸ் பிரிமியம், மியூசுவல் பன்ட்ஸ் போன்ற 80C பிரிவில் முதலீடு செய்யலாம். அடுத்து ரூ.2 லட்சம் வரை வீட்டுக்கடனுக்கான திரும்பி செலுத்தும் தொகையை கணக்கில் காட்டலாம்.
அடுத்ததாக தலா ரூ.50000 வரை மெடிக்கல் இன்சூரன்ஸ் மற்றும் தேசிய பென்சன் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். இதைத்தவிர நிரந்தர கழிப்பு தொகையை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமமாக அரசே உயர்த்தியுள்ளது. இதைத் தவிர வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒரு லட்சம் வரை வீட்டு வாடகைக்கு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவு என பல வகைகளின் கீழும் வரிச்சலுகை பெறலாம்.
இதைப்போன்ற அரசு வழங்கும் திட்டங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் ரூ.10 லட்சம் வரை உள்ள உங்கள் வருமானத்திற்கு உங்களால் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியும்.