வங்கியில் 500 ரூபாய் எடுக்க 30 கி.மீ நடந்தே சென்ற பெண்..! வங்கியில் காத்திருந்த அதிர்ச்சி..! வெறுங்கையுடன் வீடு திரும்பிய சோகம்..!



help-pours-in-for-agra-woman-who-walked-30-km-for-rs-50

ஜன்தன் வங்கி கணக்கில் வந்திருக்கும் 500 ரூபாய் பணத்தை எடுப்பதற்காக பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் 30 கிலோமீட்டர் நடந்தே சென்று, வெறும்கையுடன் மீண்டும் 30 கிலோமீட்டர் நடந்துவந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் வாடும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு கூறியபடி தனது வங்கி கணக்கில் பணம் வந்திருக்கும் என நினைந்த டெல்லி ஆக்ரா பகுதியில் வசிக்கும் ராதாதேவி (50) என்ற பெண், அந்த பணத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

lockdown

ஆனால் ராதாதேவி கணக்கு வைத்திருக்கும் வாங்கி அவர் வசிக்கும் பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது போக்குவரத்துக்கு வசதியும் இல்லாததால் வங்கிக்கு நடந்து செல்ல முடிவு செய்த ராதாதேவி, தனது 15 வயது மகனை துணைக்கு அழைத்துக்கொண்டு 30 கிலோ மீட்டர் நடந்தே சென்று பைரசோபாத் மாவட்டம் பச்சோகரா என்ற இடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை அடைந்துள்ளார்.

அவர் வங்கிக்கு போன பிறகுதான் அவரது வங்கி கணக்கு ஜன்தன் கணக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் எந்த ஒரு இருப்பு தொகையும் இல்லை. இதனால் வெறும் கையுடன் 30 கிலோமீட்டர் மீண்டும் நடந்தே தனது ஊருக்கு சென்றுள்ளார் ராதாதேவி.

இதுகுறித்து கூறிய வங்கி அதிகாரிகள், பாவம் அந்த பெண், தனது வங்கி கணக்கு ஜன்தன் வங்கி கணக்கு இல்லை என்ற தகவலை கேட்டதும் ராதாதேவி மிகவும் மனமுடைந்துவிட்டார். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்ததாக கூறியுள்ளனர்.