AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
1000 இல்ல 2000 இல்ல மொத்தம் 35 லட்சம்! சொந்த வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை திருடிய 14 வயது மாணவன்! அதிரவைக்கும் காரணம்....
ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லப்கார் பகுதியில் உள்ள ஒரு 14 வயது மாணவன், சில இளைஞர்களின் மிரட்டலுக்கு பலியாகி, வீட்டில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதியின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
மாணவனை குறிவைத்த இளைஞர்கள்
பகத் சிங் காலனியில் வசிக்கும் மாணவன், தனது பெற்றோர்கள் இறந்த பிறகு மாமா ராஜ்பால் சர்மாவுடன் வாழ்ந்து வந்தான். மே 4 ஆம் தேதி ராஜ்பால் அலமாரியில் வைத்திருந்த 35 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் விசாரணையில், மாணவன் பள்ளியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்குப் பிறகு, இரண்டு இளைஞர்கள் அவனை மிரட்டி பணம் கேட்டது வெளிச்சம் கண்டது.
மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு
முதலில் 20,000 ரூபாய் கொடுக்க மாணவன் கட்டாயப்படுத்தப்பட்டான். ஆனால் அதில் திருப்தியடையாத இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டி, மேலும் பணம் கேட்டனர். அச்சத்தில், மாணவன் 3 லட்சம், பின்னர் 2 லட்சம், 3 லட்சம் என தொடர்ந்து அலமாரியில் இருந்து பணத்தை எடுத்து வழங்கினான். கடைசியாக 1 லட்சம் ரூபாயை எடுத்துச் செல்லும்போது, மற்றொரு இளைஞர் அவனை வழியில் மிரட்டி 50,000 ரூபாயை பறித்தான்.
இதையும் படிங்க: போற போக்கே சரியில்லையே! குரங்குடன் சண்டை போட்ட நாய்கள்! நொடியில் மாணவி மீது பாய்ந்து கன்னத்தை கிழித்து 17 தையல்கள்... பெரும் அதிர்ச்சி!
மொத்தம் 35.5 லட்சம் பறிப்பு
மொத்தத்தில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து 35.5 லட்சம் ரூபாயை பறித்தனர். இதில் ஒருவன் 26 லட்சமும், மற்றொரு இளைஞன் 9 லட்சமும் பெற்றனர். ராஜ்பால் சர்மா சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம், சிறுவர்களை குறிவைத்து நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எவ்வளவு கொடுமை! வரதட்சணை கேட்டு மனைவியை எலும்பு கூடாக மாற்றிய கணவன்! 2 வருஷமா சாப்பாடு கொடுக்கல, உடலில் சூடு வைத்து... பகீர் சம்பவம்!