கேண்டினில் உருளைக்கிழங்கை கழுவ ஜட்டியுடன் நின்ற சமையல் பணியாளர்; அதிர்ச்சி வீடியோ வெளியானதால் மாணவர்கள் ஷாக்.!

கேண்டினில் உருளைக்கிழங்கை கழுவ ஜட்டியுடன் நின்ற சமையல் பணியாளர்; அதிர்ச்சி வீடியோ வெளியானதால் மாணவர்கள் ஷாக்.!



Haryana Sonipat Jindal University Food Clean Shocking Video 

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டில், ஜிண்டால் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கேண்டின் உணவுகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. 

அதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், கேன்டீனில் உருளைக்கிழங்கை கழுவ ஊழியர் செய்த செயல் அதிர்ச்சியை தந்துள்ளது. 

அதாவது, உருளைக்கிழங்கை சுத்தம் செய்ய பேண்டை அவிழ்த்து உள்ளாடையுடன் பெரிய அளவிலான பாத்திரத்தில் இறங்கி கால்களால் மிதித்து சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, கேண்டினில் தற்காலிகமாக சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.