மாட்டு சாணம் சாப்பிடுங்க.. கோமியம் குடிங்க.. ஒரு மருத்துவர் செய்யும் காரியமா இது?? வைரல் வீடியோ..

மாட்டு சாணம் சாப்பிடுங்க.. கோமியம் குடிங்க.. ஒரு மருத்துவர் செய்யும் காரியமா இது?? வைரல் வீடியோ..


Haryana doctor eat cow dung viral video

மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மாட்டு கோமியத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும், கொரோனா வைரஸில் இருந்து குணமடையலாம் என்றும் பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை நாம் பார்த்திருப்போம். இத்தகைய செயலை எதிர்த்து பல்வேறு மருத்துவர்களும் மக்களுக்கு அறிவுரை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவர் ஒருவரே மாட்டு சாணத்தை சாப்பிட்டுவிட்டு, மாட்டு சாணம் சாப்பிட்டால் மாட்டு சாணம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் என கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர் நேரடியாக பசுக்கள் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தொழுவத்திற்கு சென்று, அங்கு தரையில் இருந்த பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி கேமிராவை பார்த்து பேசுகிறார். மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும் , ​​பசுவின் சிறுநீரைக் குடிப்பதாலும் ஏற்படும் நன்மைகளை பற்றி மருத்துவர் மிட்டல் அந்த வீடியோவில் பேசுகிறார்.

மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும், மாட்டின் கோமியத்தை பருகுவதாலும் நமது உடலில் ஏற்படும் பல கடுமையான நோய்களைத் தடுக்க உதவுகின்றன. பெண்கள் சுக பிரசவமடைய பசுவின் சாணத்தை உண்ண வேண்டும், பசுவின் சாணத்தை சாப்பிட்டால் நம் உடலும் மனமும் தூய்மையாகும். நமது ஆன்மா தூய்மையாகிறது. அது நம் உடலுக்குள் நுழைந்தவுடன், அது நம் உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. என அந்த வீடியோவில் கூறியுள்ளார் மருத்துவர் மனோஜ் மிட்டல்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருவதோடு, பலரும் இந்த செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.