இந்தியா

தாமதம் ஆனால் தரமான சம்பவம்! நிர்பயா கொலை வழக்கிற்கு கிடைத்த நியாயம்!

Summary:

Hanging punishment done for nirpaya murder

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தீவிர விசாரணைக்கு பிறகு தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தூக்கிலிடப்படபடுவார்கள் என உறுதிசெய்யப்பட்ட நிலையில்  அதிகாலை 5.30 மணியளவில் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஒன்றாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.


Advertisement