தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#GujaratElections2022: பாஜக வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்.. படுகாயத்துடன் வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி..!
குஜராத் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மீ என மும்முனை போட்டியானது அங்கு நிலவி வந்ததால், அந்தந்த கட்சியை சேர்ந்த பலரும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை முதலாகவே அம்மாநிலத்தில் மக்கள் திரளாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகைதந்து வாக்களித்து வருகின்றனர். அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனஸ்தா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பியூஸ் படேல் சென்ற காரின் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், பியூஸ் படுகாயமடைந்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் பியூஸ் படேலின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக அவரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலை வருகிறது.