இந்தியா

உயிரிழந்த தாத்தாவின் பிணத்தை மூட்டைக்கட்டி பேரன் செய்த காரியம்! வீட்டிற்குள் போலீசார் கண்ட அதிர்ச்சி காட்சி!!

Summary:

உயிரிழந்த தாத்தாவின் பிணத்தை அடக்கம் செய்யாமல் பேரன் பிரிட்ஜுக்குள் ஒளித்து வைத்திருந்த சம

உயிரிழந்த தாத்தாவின் பிணத்தை அடக்கம் செய்யாமல் பேரன் பிரிட்ஜுக்குள் ஒளித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் 90 வயது நிறைந்த ஓய்வுப்பெற்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் அவர் தனது 26 வயது நிறைந்த பேரன் நிகில் என்பவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் நிகிலும் வேலையில்லாத நிலையில் தனது தாத்தாவின் பென்ஷன் பணத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த முதியவர் கடந்த சில ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பேரன் நிகில் அவரை அடக்கம் செய்ய பணமில்லாமல் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் அங்கு விரைந்த போலீசார்கள் அவர்களது வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது நிகில் அவரது தாத்தாவின் உடலை ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்தது தெரியவந்தது. மேலும் தாத்தாவின் பென்ஷன் பணத்திற்காகவே அவர் அவ்வாறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement