தமிழகம் இந்தியா

லண்டனில் இருந்து மகளுடன் சென்னை வந்த பெண்.. லண்டன் திரும்பி சென்ற பிறகு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

லண்டனில் இருந்து தாத்தா வீட்டிற்கு வந்த சிறுமிக்கு சிறுமியின் தாத்தா பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து தாத்தா வீட்டிற்கு வந்த சிறுமிக்கு சிறுமியின் தாத்தா பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்துவரும்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது மகளுடன் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். தந்தை வீட்டில் சுமார் 5 வாரங்கள் தங்கிருந்தநிலையில் மீண்டும் அவர்கள் லண்டன் சென்றுள்ளன்னர்.

சென்னை சென்று திரும்பியதில் இருந்து தனது மகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படவே லண்டனில் இது தொடர்பாக சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கின் போது அந்த சிறுமி கூறிய சம்பவம் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைய செய்தது.

சிறுமி தனது தாயாருடன் சென்னை வந்திருந்தபோது சிறுமியின் சின்ன தாத்தா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியே தெரிந்ததை அடுத்து லண்டனில் இருந்தபடி அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், தற்போது மீண்டும் சென்னை வந்துள்ள அவர்கள் குறிப்பிட்ட நபர் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருமங்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த கிஷ்ன்சந்த் தலானி என்பவரை கைது செய்துள்ளனர்.


Advertisement