இந்தியா

தம்பி உங்க வாயை கொஞ்சம் திறங்க!! வாயை திறந்ததும் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

வாய்க்குள் வைத்து தங்கம் கடத்திவந்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளார்.

வாய்க்குள் வைத்து தங்கம் கடத்திவந்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கடத்திவரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

அதில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே, அவர்களை அழைத்து சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடம் எந்த ஒரு  சட்டவிரோத பொருளும் சிக்கவில்லை. இதனை அடுத்து, அவர்களை தனி தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தபோது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், இருவரும் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 951 கிராம் மதிப்புள்ள தங்கத்தை தங்கள் வாயின் அடிப்புறத்தில் மறைத்துவைத்து கடத்திவந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் விசாரணைக்காக போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement