கொலைக்கு எதிராக கருத்து கூறிய சிறுமிக்கு காஷ்மீரில் இருந்து கொலை மிரட்டல்: தட்டி தூக்கிய போலீசார்..!

கொலைக்கு எதிராக கருத்து கூறிய சிறுமிக்கு காஷ்மீரில் இருந்து கொலை மிரட்டல்: தட்டி தூக்கிய போலீசார்..!



girl who spoke out against the killing received death threats from Kashmir

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த ஜூன் 28 அன்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில், இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் கன்னையா லால் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், கன்னையா லால் கொலை செய்யப்பட்டது குறித்து மும்பையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது கருத்தை கூறி வீடியோ வெளியிட்டார் அவருக்கு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயாஸ் அகமது பட் (30) என்பவர் கொலை மற்றும் பாலியல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தலால், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பயாஸ் அகமது பட்டை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் உதவியுடன் பட்காமிலிருந்து மும்பை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.