ஜொலிக்கும் நகைகளுடன் ஆட்டம்.! டிக்டாக் வீடியோவால் அம்பலமான இளம்பெண்ணின் திருட்டுதனம்!girl-stolen-jewels-from-working-house

அசாம் மாநிலம் கவுகாத்தியில், வயதான பெண் ஒருவரை கவனித்துக் கொள்வதற்காக உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் மூலமாக சுமி கலிதா என்ற இளம்பெண் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் ஒருநாள் வீட்டிலிருந்த விலையுயர்ந்த வாட்ச், நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். மேலும் அவர் லக்கிம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

jewels

அதனை தொடர்ந்து அந்த பெண்ணை பல இடங்களில் தேடியும் எந்த பலனும் இல்லை. அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் டிக்டாக்கில் அதிகம் ஆர்வம் கொண்ட அந்த பெண், மூதாட்டி வீட்டிலிருந்து திருடிய நகைகள் மற்றும் வாட்ச் ஆகியவற்றை அணிந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவர் அனாமிகா என்ற பெயரில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நகைக்கு சொந்தக்காரர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலிசார்கள் டிக்டாக் ஐடியை வைத்து அந்த பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த பெண் தான் வெளியிட்டுள்ள வீடியோக்களை டெலிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.