காவல் துறையில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண் சீரழிப்பு.. காவல் உதவி ஆய்வாளர் பயங்கர செயல்..!!girl-sexually-harrased-by-police-officer

காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று நினைத்த இளம்பெண்ணை காவல்துறையில் வேலை தருவதாக கூறி, காவல் உதவிஆய்வாளர் அத்துமீறிய பயங்கரம் நடந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆசியாபாத் மாவட்டம் கொமரம்பீம் பகுதியை சார்ந்த இளம்பெண் காவல்துறையினில் சேர வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்து வந்துள்ளார். தினமும் பயிற்சி எடுத்த வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு காவல்துறை உதவி ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

காவல்துறை உதவி ஆய்வாளரும், "நான் காவல்துறையில் உனக்கு பணி வாங்கி தருகிறேன்" என்று கூறியிருக்கிறார். மேலும் காவல் நிலையத்திற்கு வரவழைத்த நிலையில், காவல்துறையில் சேர்வதற்கான உதவிகள் செய்வதாக கூறுவதாக கூறி ஆசையாக பேசி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

telungana

ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தவே, அந்த பெண் தயங்கிய சமயத்திலும் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது  பின்வரும் நாட்களில் தொடர்ந்து வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் தொல்லை தாங்காத பெண்மணி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து பெற்றோரிடம் கூறி அழுது புலம்புகிறார். 

இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லாத நிலையில், உளவுத்துறை அதிகாரிகளிடம் சிறப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.