இந்தியா லைப் ஸ்டைல்

ஸ்லீப்பர் பஸ்ஸில் இருந்து வந்த திடீர் சத்தம்..! இளம் பெண்ணின் செயலால் அதிர்ந்த பயணிகள்..!

Summary:

Girl got drunk in sleeper bus chennai to pondichery

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கோச்) பேருந்து ஒன்றில் இளம் பெண் செய்த முகம் சுளிக்கவைக்கவும் செயலால் சக பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் நடந்துள்ளது.

தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்றில், மிகவும் ஆபாசமாக உடை அணிந்து, வித்தியாசமாக இளம் பெண் ஒருவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். முதலில் அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளத்தநிலையில் பேருந்து பாதி வழியில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து உள்ளே இருந்து சத்தம் கேட்டுள்ளது.

மேலும், பேருந்து முழுவதும் மது வாடையும் சேர்ந்து வந்ததை அடுத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை சோதனை செய்ததில் அந்த இளம் பெண் கையில் மது பாட்டிலுடன் சத்தம் போட்டுக்கொண்டே மது அருந்தியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த இளம் பெண்ணை அனைவரும் கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை. இவரை இங்கையே இறக்கிவிடவேண்டும் என சிலர் சொல்ல, இரவு நேரம் என்பதால் நடு வழியில் இறக்கிவிடவேண்டாம் என சிலர் கூறியுள்ளனர்.

எனினும் மதுபோதையில் இருந்த அப்பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மது அருந்திக்கொண்டு சத்தம் போட்டப்படியே சென்றுள்ளார். இளம் பெண்ணின் இந்த மோசமான செயல் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Advertisement