இந்தியா

12 வயது சிறுமிக்கு சொந்த மாமாவே செய்த கொடூரம்! துயரத்தில் பெற்றோர்

Summary:

Girl ganrapped by uncle and killed

மத்திய பிரதேசத்தில், 12 வயது சிறுமியை அவரது சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சிறுமியின் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மார்ச் 14 ஆம் தேதி, மத்திய பிரதேசம் சாகர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் உதவியுடன் சிறுமியை தேடத் துவங்கினர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளிந்தனர். 

காவல் துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுமி கொலை செய்யப்பட்டு ஊர் வெளியே இருக்கும் ஒரு வயலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் முகம் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. 

சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கலுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

சிறுமிக்கு மாமா உறவுமுறையில் இருக்கும் ஒருவர், அந்த சிறுமியின் பெற்றோருடன் சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஈடுபட்ட அதே ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் தான் இந்த நாச வேலையை செய்திருப்பார்கள் என போலீசாரை குழப்பினார். 

ஆனால், போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த மாமா தான் சிறுமியின் சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகளை அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். 

அதில், சம்பவத்தன்று சிறுமி பள்ளியில் தேர்வு முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில், சிறுமியின் சகோதரர் ஒருவர் சிறுமியை ஊருக்கு ஒதுக்குப்பறமாக இருக்கும் வயலிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மேலும் சகோதரர் மற்றும் சிறுமியின் மாமா ஆகிய மூவரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் அத்தையும் அங்கு இருந்துள்ளார். 

கடைசியில் சிறுமி போலிசிடம் கூறப்போவதாக மிரட்டவே, சிறுமியின் அத்தை சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் முகத்தை முற்றிலும் சேதப்படுத்திய அவர்கள் சிறுமியின் உடலை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். 

 


Advertisement