17 வயது சிறுமி காரில் கூட்டு பாலியல் பலாத்காரம்... எம்.எல்.ஏவின் மகன் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு..! போலீசார் அதிரடி..!

17 வயது சிறுமி காரில் கூட்டு பாலியல் பலாத்காரம்... எம்.எல்.ஏவின் மகன் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு..! போலீசார் அதிரடி..!


Girl gang raped in telungana

17 வயது சிறுமியை சொகுசுகார் ஒன்றில் 3பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் 17 வயது சிறுமியை காருக்குள் வைத்து மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் ஜூப்ளி ஹீல்ஸ் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், எம்.எல்.ஏவின் மகன், ஒரு சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் ஆகிய மூவரும் சேர்ந்து காருக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.telunganaஇதன் காரணமாக அவர்கள் மூவரின் மீதும் இந்தியதண்டனை சட்டத்தின் (கூட்டுப் பாலியல் பலாத்காரம்) 376 பிரிவின்கீழ் வழக்குபதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.