3 பீர் குடிக்க ஆசைப்பட்ட இளம் பெண். ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!
3 பீர் குடிக்க ஆசைப்பட்ட இளம் பெண். ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

மும்பை அருகே உள்ள பொவாய் என்னும் நகரை சேர்ந்தவர் இளம் பெண் ராதிகா ப்ரேக். வங்கி ஊழியரான இவருக்கு திடீரென பீர் சாப்பிட ஆசை வந்துள்ளது. ஆனால், கடைக்கு சென்று பீர் வாங்க முடியாததால் ஆன்லைன் மூலம் பீர் ஆர்டர் செய்ய முயற்சித்துள்ளார்.
ஒருவழியாக இணையத்தில் தேடி வீட்டுக்கு பீர் டெலிவரி செய்யும் கடை ஒன்றை கண்டுபிடித்து அந்த கடைக்கு போன் செய்து மூன்று பீர் ஆர்டர் செய்துள்ளார் ராதிகா. ஆனால், போனை எடுத்த கடை ஊழியர்கள் முதலில் பணம் செலுத்தினால் மட்டுமே ஆர்டர் செய்யப்படும் என கூறி, நீங்கள் கூகிள் பே மூலம் பணம் செலுத்தலாம் என கூறியுள்ளனர்.
அதன்பின்னர் ராதிகாவின் UPI ஐடி யை அவர்கள் பெற்று அதற்கு பெமென்ட் ரெகோஸ்ட் அனுப்பியுள்ளனர். அதனை ஏற்ற ராதிகாவின் வங்கி கணக்கில் இருந்து 29,001 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா அந்த கடைக்கு மீண்டும் போன் செய்து இதுபற்றி கேட்டுள்ளார். அவர்கள் பணம் தவறுதலாக எடுக்கப்பட்டுவிட்டதாகவும், பணம் திருப்பி அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ராதிகாவுக்கு சற்று நேரத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்து மீண்டும் 58,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டதில் அந்த சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட கடைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார் அந்த பெண்.
ஆனால், அந்த கடையில் இப்படி ஒரு எண் பயன்படுத்தப்படவே இல்லை என ஊழியர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.