அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்.! திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

அடக்கம் செய்யும்போது சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்.! திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!


girl-alive-while-funeral-function

பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியில் வசித்து வந்தவர் 36 வயது நிறைந்த ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் உறவினர்களுடன் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. அப்பொழுது காரில் சென்ற அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அந்த விபத்தில் ரோசா மற்றும் அவரது உறவினர் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ரோசாவை அடக்கம் செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் முறைப்படி ரோசாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

girl

பின்னர் அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை திறந்தபோது ரோசா திடீரென கண் விழித்துள்ளார். மேலும் சவப்பெட்டியை உதைத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவப்பெட்டியோடு ரோசாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சில மணிநேரத்தில் ரோசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ரோசாவை சரியாக பரிசோதனை செய்யாமல் உயிரிழந்துவிட்டார் எனக் கூறியதால் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.