நெஞ்சே பதறுது...! நடை மேம்பாலத்தில் உடம்பெல்லாம் வெட்டுப்பட்டு.. ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்..! சிசிடிவி காட்சியை ஆய்வு செய்யும் போலீஸ்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடை மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வேவ் சிட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிடந்த அவரது உடலில் பலத்த காயங்களும் வெட்டுக் காயங்களும் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடை மேம்பாலத்தில் கிடந்த இளைஞர் சடலம்
காசியாபாத் வேவ் சிட்டி பகுதியில் உள்ள நடை மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு சென்ற வேவ் சிட்டி போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளி கழிப்பறையை திறந்ததும் கண்ட அதிர்ச்சி! 7-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி...!!!
உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள்
உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸார் ஆய்வு செய்தபோது, பல இடங்களில் கடுமையான காயங்களும் வெட்டுக் காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் தாக்கிக் கொலை செய்துவிட்டு, சடலத்தை நடை மேம்பாலத்தில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸார்
இதையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உயிரிழந்தவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், நடை மேம்பாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.