தலைக்கவசமே நம் உயிர்க்கவசம்... அதுக்கு இந்த வீடியோ தான் சாட்சி மக்களே...! திடீரென குறுக்கே பாய்ந்த தெரு நாய்யால் நடந்த பயங்கர விபத்து...! ஆனால் தப்பிய உயிர்... சிசிடிவி காட்சி.!!!



street-dog-causes-bike-car-accident-Y7M5ZW

சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த தெருநாயால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அவர் முறையாக தலைக்கவசம் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குறுக்கே பாய்ந்த நாய்; கண் இமைக்கும் நேரத்தில் விபத்து

சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இருசக்கர வாகன ஓட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தெருநாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்தார்.

இதையும் படிங்க: அடப்பாவி... உன்னோட தப்புக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு! புதுப்பெண்ணுக்கு நொடியில் நேர்ந்த கொடூரம்....! 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை! நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ...!!!

சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், சில அடி தூரம் சறுக்கிக் கொண்டே சென்ற நிலையில், எதிரே வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நடந்த இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

தலைக்கவசம் அணிந்ததால் தப்பிய உயிர்

கார் மோதியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயங்கள் ஏற்பட்டாலும், தலையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அவர் முறையாக தலைக்கவசம் அணிந்திருந்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. விபத்தின் முழு காட்சியும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் விபத்து காட்சி

விபத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறிய தூரம் செல்லும்போதும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்றும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் வீதிப் பாதுகாப்பு ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஏலூர் அருகே சோகம்!