இந்தியா

ஓஎன்ஜிசி கேஸ் கசிவு! 12 நேரமாக பயங்கர சத்தத்துடன் கசியும் வாயு! பீதியில் கிராம மக்கள்!

Summary:

gas leak in Andhra


ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு மையத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக வாயு கசிந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு மையத்தில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக வாயு கசிந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க உப்பிடி கிராமத்தில் மின்சாரம் மற்றும் செல்போன் டவர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. பைப் லைனில் இருந்து வெளியேறும் வாயுவை நிறுத்த ஓ.என்.ஜி.சி. நிபுணர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 திடீரென உப்பிடி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கேஸ் பைப் லைனில் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Advertisement