மகிழ்ச்சி செய்தி... சிலிண்டர் விலை ரூ.102.50 குறைப்பு..!

மகிழ்ச்சி செய்தி... சிலிண்டர் விலை ரூ.102.50 குறைப்பு..!


Gas Cylinder Down Rs 100 Announced by Gas Agencies

ஆங்கில புத்தாண்டான இன்று நேஷ்னல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம், 19 கிலோ எடையுள்ள வணிக எல்.பி.ஜி சிலிண்டர் விலையை ரூ.102.50 குறைத்து அறிவித்துள்ளது. இதனால் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.1998.50 ஆக இருக்கும். 

India

19 கிலோ எடையுள்ள சிலிண்டர் பொதுவாக உணவகம், தேநீர் கடைகளில் உபயோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.100 உயர்த்தப்பட்ட நிலையில், டெல்லியில் சிலிண்டர் ரூ.2,100 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலைகள் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்த நிலையில், அதன் விலை தற்போது மாற்றம் செய்யப்படவில்லை.