ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வந்தால் எப்படி இருக்கும்...? அதிசயம் ஆனால் உண்மை....!

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வந்தால் எப்படி இருக்கும்...? அதிசயம் ஆனால் உண்மை....!



four-members-of-a-family-celebrates-birthday-on-may-25t

ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வந்தால் எப்படி இருக்கும்? என்ற சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர், பட்டுவம் பகுதியை  சேர்ந்தவர் அனீஷ்குமார். 1980 மே மாதம் 25-ந் தேதி பிறந்தவர். இவர் வேலைக்காக வளைகுடா நாட்டிற்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். பின்னர் அனீஷ்குமாருக்கும் அஜிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அஜிதா 1987-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பிறந்திருந்தார். இந்த ஒற்றுமையை அறிந்து குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர்.

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் அதிசயம் மாற்றும் ஆச்சரியமும் கூட! அனீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் 2012-ம் ஆண்டு மகள் பிறந்தார்.   கணவன்-மனைவி இருவரின் பிறந்த நாளான மே 25-ந் தேதியே மகளும் பிறந்தது தான் கணவன் மனைவி இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த ஆச்ரியத்தை அளித்தது.

மேலும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனும் மே 25-ந்தேதி பிறந்த போதுதான் குடும்பத்தினர் இந்த ஒற்றுமையை அறிந்து வியப்பின் எல்லைக்கே சென்றனர். இது பற்றி அனீஷ் குமார் கூறும்போது, இது எதேச்சையாக நடந்தது. இதற்காக நாங்கள் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என் மனைவிக்கு சுக பிரசவம் தான் நடந்தது என்று கூறினார்.

குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிறந்த நாளை நாங்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடுவோம், என்றார். இவர்களை குடும்பத்தினர் மட்டுமல்ல அந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஆச்சரியமாகவே பார்த்து ரசிக்கிறார்கள்.