செல்போனில் பெண்களுக்கு ஆபாச தொல்லை அளித்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கைது...!!

செல்போனில் பெண்களுக்கு ஆபாச தொல்லை அளித்த உணவு டெலிவரி ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மும்பை மலாடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு அடையாளம் தெரியாத செல்போன் நம்பரில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்துள்ளது. மேலும் ஒருவர் வீடியோ கால் மூலமும் அழைப்பு விடுத்து ஆபாச தொல்லை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் மலாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொல்லை அளித்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தன்று அந்த பெண் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தார். அதற்காக அவரது செல்போன் நம்பரை கொடுத்திருந்தார். அந்த பெண்ணிடமிருந்து செல்போன் நம்பரை வாங்கிய உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஜோதிராம் மன்சுலே என்பவர் தான் அந்த பெண்ணிற்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்ததுள்ளார் என்பது தெரியவந்தது.
அவர் புனேயில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இதே போல் 20 பெண்களுக்கு மேல் இவர் ஆபாச தொல்லை அளித்துள்ளது தெரியவந்தது.