பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை எப்போது இயல்புநிலைக்கு திரும்பும்?

பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை எப்போது இயல்புநிலைக்கு திரும்பும்?


Flight service When will be normal

சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் சில தளர்வுகளுடன், பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, சர்வதேச அளவில் விமான சேவை முடங்கி உள்ளது.

flight

இந்தவருடம் விமான சேவை கொரோனாவால் முடங்கியதால், கடந்த வருடம் ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த வருடம்  உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86. 5 சதவீதமும், சர்வதேச விமானப்போக்குவரத்து சேவை சுமார் 97 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்னர் 2023ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்பட்ட நிலையில், 2024வரை தற்போதைய நிலை நீடிக்கலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.