தமிழகம்

இனி தாறுமாறாக எகிறவிருக்கும் மீன் விலை.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

இந்திய கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சில குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடிக்க

இந்திய கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சில குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில், முதல் கட்டமாக வங்கக்கடலில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுன் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. 

3 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு 45 நாட்கள் தடைக்காலம் என்பது 61 நாட்களாக உயர்த்தப்பட்டது. இதன்படி இன்று நள்ளிரவு தொடங்கிய மீன்பிடித் தடைக்காலம், ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதனையடுத்து மீன் ஏற்றுமதி தளங்கள் மூடப்பட்டன. மீன் பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்கள் விலையும் வரும் நாட்களில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     

மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு வழக்கம்போல் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement