இந்தியா

மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 4 நோயாளிகள் பரிதாப பலி.! வருத்தத்தில் பிரதமர் மோடி.!

Summary:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் 4 நோயாளிகள் பலி.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர் ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் நெருங்கமுடியவில்லை. 

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணியிலும், மற்றொரு புறம் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் 4 நோயாளிகள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், சிலர் காயமடைந்தனர். மற்ற நோயாளிகளை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஏ.சி.யில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், நாக்பூரில் மருத்துவமனை தீ விபத்தால் வருத்தம் அடைகிறேன். என் எண்ணங்கள் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement