இந்தியா Covid-19

ஆந்திராவில் கொரோனா பராமரிப்பு மையத்தில் தீ விபத்து! 7 பேர் பரிதாப பலி!

Summary:

fire accident in andhra

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில், அங்கிருக்கும் ஓட்டல்களில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement