கர்ப்பப்பையில் குழந்தையை காணோம்!! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

கர்ப்பப்பையில் குழந்தையை காணோம்!! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..



Fetus grow on mother liver

இளம் பெண்ணின் கல்லீரலில் கரு வளர்ந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாதவிடாய் பிரச்சனை குறித்து மருத்துவர்களை அணுகியுள்ளார். மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில், அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணை ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம், அந்தப் பெண்ணின் கல்லீரலுக்குள் அந்தக் கரு வளர்ந்துவருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த மருத்துவர் ஒருவர், "பொதுவாக கருவுற்ற முட்டை, அதாவது கரு, பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரும். சில நேரங்களில் அது கர்ப்பப்பையை வந்தடைவதற்கு முன்பே, பாலோப்பியன் குழாய் ( fallopian tube) என்னும் இடத்தில் அமர்ந்து, அங்கேயே வளரத்தொடங்கிவிடும்.

இதனை கர்ப்பப்பைக்கு வெளியிலான கருவுறுதல் என்போம். இதுபோன்ற கருவுறுதலால் குழந்தையின் தாய்க்கு பெரிய ஆபத்து நேரிடலாம், அதேநேரம் குழந்தையும் இறந்துவிடும். ஆனால் இந்த பெண்ணின் வழக்கில், குழந்தை அவரது தாயின் கல்லீரலில் வளர்வது மிகவும் அபூர்வமான ஒன்று.

கர்ப்பப்பைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு இடத்தில் குழந்தை வளர்ந்துவருவது மிகவும் அரிதான ஒன்று." என கூறிய மருத்துவர், அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். ஆனால் அந்த குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.