நாட்டைவிட்டே போறேன்.. பொதுஇடத்தில் தாக்கப்பட்ட பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணி வேதனை.!

நாட்டைவிட்டே போறேன்.. பொதுஇடத்தில் தாக்கப்பட்ட பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணி வேதனை.!


Feminist Bindhu Ammani Attacked Issue She Speech I Get out Form Country due to Safety

பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணினியை தாக்கிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

கடந்த 2018 செப். மாதம் உச்சநீதிமன்றம் கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வரை வரை உள்ள பெண்களும் சென்று ஸ்வாமியை தரிசனம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து, பெண்ணிய ஆர்வலர்கள் சபரிமலைக்கு வர தொடங்கினர். 

அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவ்வாறு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வர முயன்ற பெண்களில் முதன்மையானவர் பிந்து அம்மணி. இவரை கடந்த ஜன. 5 ஆம் தேதி பொதுஇடத்தில் வைத்து நபரொருவர் நையப்புடைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. பிந்துவும் சரிக்கு சமமாக நின்று சண்டையடித்தார்.

Feminist

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகவே, அம்மாநில எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியை குற்றம் சாட்டியது. மேலும், தாக்குதல் நடத்திய நபரின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அம்மாநில அரசு தாக்குதல் நடத்திய நபரின் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டது. 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிந்து அம்மணியை தாக்கியது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொடியிலை பகுதியை சார்ந்த மோகன்தாஸ் என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். தாக்குதலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிந்து, "நான் பாதுகாப்பாக இல்லை. நான் நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் தேடப்போகிறேன். அதுதான் ஒரே வழி" என்று தெரிவித்தார்.