கபடி பயிற்சியாளர் மீது வீராங்கனை பரபரப்பு பாலியல் புகார்... காவல் துறை விசாரணை...!
கபடி பயிற்சியாளர் மீது வீராங்கனை பரபரப்பு பாலியல் புகார்... காவல் துறை விசாரணை...!

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். டெல்லி துவாரகாவில் உள்ள பாபா அரிதாஸ்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கடந்த 2012-ஆம் வருடத்தில் இருந்தே கபடி பயிற்சி பெற்றதாகவும், 2015-ஆம் வருடம் பயிற்சியாளர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார் என்றும், அந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி என்னை மிரட்டினார் என்று கூறியுள்ளார் .
இது மட்டுமின்றி 2018-ஆம் வருடம் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் ரூ.40 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வீராங்கனையிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.