இந்தியா

ஆசைஆசையாக வளர்த்த மகளையும், மகனையும் கொன்றுவிட்டு தந்தை செய்த அதிர்ச்சி காரியம்! வெளியான பதற வைக்கும் சம்பவம்!

Summary:

father killed children for stress

டெல்லியில் வசித்து வந்தவர் மதுர் மலானி. இவர் தனியார் காகித தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரூபாலி. இந்த தம்பதியினருக்கு சமிக்ஷா என்ற 14 வயது மகளும், ஷ்ரேயன்ஸ் என்ற 6 வயது மகனும் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக மதுர் மலானி வேலை பார்த்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளானார். மேலும் அவரது குடும்பத்தை மனைவி ரூபாலி மற்றும் பெற்றோர்கள் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவரிடம் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு, ரூபாலி வேலைக்கு சென்றுள்ளார்.  மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இந்நிலையில் அவர் வீட்டு உரிமையாளரிடம் வேறு சாவி வாங்கி உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அங்கு குழந்தைகள் இருவரும்  படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதற்கிடையில் ஹைதர்பூர் மெட்ரோ நிலையம் அருகே நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. 

மேலும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது மதுர்மலானி என தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளை கொன்றுவிட்டு, ரயில் முன் பாய்ந்து மலானி தற்கொலை செய்துகொண்டது ஏன் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement